வியாழன், 25 டிசம்பர், 2014

                                      என்  அப்பா 

                                     

தட்டுத்  தடுமாறி  எட்டு அடிஎடுத்து 
ஏங்கித்  தவிக்கயிலே
என்னே ! என்னருகே  ஓடிவந்து நீ 
சின்னக்கை தொட்டு 
எடுத்து அடிவைக்க
சொல்லிக்கொடுத்தாயே!
அப்பா எனச்சொல்லி  என் நாவில்  நான் படிக்க 
எத்தனித்து  நிற்கையிலே 
நாவால் நான் படிக்க 
நற்பாடம் சொன்னாயே!
அறுசுவையும் நான்சுவைக்க  
அள்ளிக்கொடுத்தவனே !
பட்டினியாய் நீ இருந்த காலமதை 
நான் கண்டதில்லையப்பா !
பட்டினியாய்  நானிருக்க 
நீ விட்டதில்லையப்பா!
ஊருக்கு உத்தமனாய் 
நீ இருந்த  காலமதை 
ஊர்  சொல்லி  நான் கேட்க 
என் உள்ளம்  விம்முதையா !
வாழ்க்கைப்  பாடத்தை 
நீ சொல்லி நான் கேட்ட 
கால நினைவெல்லாம் 
கண்முன்னே  நிற்குதையா !
கண்ட இடமெல்லாம் 
எனைப்பற்றி  நீ கூற 
கண்டவர்கள் கூறியதை 
காதினிக்க கேட்டதெல்லாம்
உன்  முகத்தை நான்பார்க்க
அத்தனையும்  தெரியுதையா !
ஊர்மெச்ச வாழ்ந்ததில்லை
உத்தமன்  நான்னென்று 
நீ கூறி  திரிந்ததில்லை
ஊருக்கு நீ உழைக்க 
ஒருபோதும்  மறந்ததில்லை !
துயரத்தில் வந்தவரை 
நீ பார்த்து நின்றதில்லை !
குணங்கெட்ட மக்களையும் 
நீ வெறுத்து ஒதுக்கவில்லை !
என் வாழ்க்கை நலமாக்க 
நீ பட்ட துன்பமெல்லாம் 
என்நெஞ்சம் என்றென்றும் 
என் நினைவில்  மறக்கவில்லை !
அத்தனைக்கும் நல்லவரை 
ஊர் போற்றும்உத்தமரை 
இரக்கமில்லா எமனிங்கே
ஏன்னெடுத்துச் சென்றானோ !
எமனே! உனக்கெமன்
இவ்வுலகில் இருந்திலையோ !
நான் துடிக்க வேண்டும்மென்று
காலகனே நினைத்தானோ !
நீ உழைத்த  உழைப்பெல்லாம் 
போதுமென்று நினைத்தானோ !
பெற்றவனே நீ  என்றும் 
என்னருகில் இருப்பாயோ !
நேருதுன்பம் யாவையுமே
தீர்த்து வைத்து  விடுவாயோ !
என் நெஞ்சில்  என்றென்றும் 
நீ இருந்து வாழ்வாயோ !
உன் செயலை என் நெஞ்சம்  
என்றென்றும் மறையாது 
நான் தூங்கும் நேரத்தில் 
உன் நினைவும் கலையாது !
அப்பா ! உன் நினைவில் 
எந்நாளும் வாழ்த்திடுவேன் !
என்னருகில் நீ இருந்து 
என்றென்றும்  காத்திடப்பா

                                                                                                                                                                         .....ஆண்டியப்பன்.....

(என் அப்பாவின் இறப்பு   என் நெஞ்சத்தில்  ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்திருக்கிறது அந்த சுமையை இங்கு இறக்கிவைகிறேன்  பகிர்ந்து கொள்ளுங்கள் )


திங்கள், 24 நவம்பர், 2014

செவ்வாய், 4 நவம்பர், 2014

                                  உழைத்துப்பார்

                            

                              

கிழக்கே சூரியன்
            உதிக்குமுன்னே
எழுவது எங்கள் மரபாகும்
மாலையில் கதிரவன்
           மறையும் பின்னே
உழைக்கும் தொழிலே உறவாகும்
உழைத்து  உழைத்து  
           ஓடாய்த்  தேய்ந்து
உடுத்த உடையும்  இல்லையடா
ஓடி ஓடி உழைத்துச் சேர்த்த
            பணத்தைக்  கேட்டால் தொல்லையடா 
மீனாய்  நீயும் பிறந்துவிட்டால் 
              எதிர் நீச்சல் போட்டுப்பார்
செடியாய்  நீயும் முளைப்பதென்றால் 
               பூமியை  வெடித்து  வெளியில்பார்
பூவாய் நீயும்  சிரிப்பதென்றால்
               மொட்டை விட்டு விரிந்துபார்
கனியாய்  கனிய  வேண்டுமென்றால்
               காயிலிருந்து பழுத்துப்பார்
வாழ்வில்  நீயும் உயர  நினைத்தால் 
               மனிதனே! நீயும்  உழைத்துப்பார்
                                                                                                                                                                                .....ஆண்டியப்பன் ......
           

திங்கள், 3 நவம்பர், 2014

                                      நியூட்டன் விதி


                              

என்முகம் பார்க்க
கண்ணாடி முன்னால் 
நான் நின்றாலும்
உன்முகம் தானே தெரிகிறது
உன்முகம் கானா
இடைவெளி நேரம்
பனிக்கூழ்கூட சுடுகிறது
என்மனம் ஏனோ
உன் நிழல்கூட
ஒட்டி ஒழிந்து கொள்கிறது
உன்முகம் பார்க்க
என் மனம் ஏனோ
ஊமை மொழியில் சிரிக்கிறது
என் விழி உன்முகம்
பதித்திடும் நேரம் 
என்மனம் பரவசமாகிறது
இருவரும் நோக்கும்
இனிமையின் நேரம்
நியூட்டனின்  விதியே நிகழ்கிறது
                                                                                                          ....ஆண்டியப்பன்....

சனி, 18 அக்டோபர், 2014

                                   வள்ளுவன்வாக்கு

                                                

பொய்சொல்லாதே
தீமை செய்யாதே
அன்பு காட்டு
நேர்மையாக நட
குழந்தையை வையாதே
கூடி வாழ்
முதியோரை மதி
மூத்தோர் சொல் கேள்
இயற்கையை நேசி
சுகாதாரமாய் வாழ்
அனைத்தும்
நீ  கூரிய  வார்த்தைதான்
வள்ளுவனே!
இன்று
வழுவிழந்து விட்டது
                                                                                                   .....ஆண்டியப்பன்.....                                                      

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

                                  வானம் உன் வசப்படும்

                                

வாழ வழியில்லை
வசந்தம்  வரவில்லை 
மகிழ்ச்சி கிடைக்கவில்லை
மலையேற சக்தியில்லை 
மயக்கம்  எனக்கில்லை 
மந்தையில் நானில்லை
மாடிவீடில்லை
மங்கையோ துணையில்லை
வாழ்க்கை பிடிப்பிடிப்பில்லை
சாகத் தேரியவில்லை
முட்டாளே!
இல்லை  என்பதை நிறுத்திவிடு
முடியும்  என்பதை கையிலெடு
கோழிக்குஞ்சாய்  இல்லாமல் நீ
ராஜாளிப் பருந்தாய் சிறகைவிரி
வானம் உன்னை வரவேற்கும்
                                                                                                         ...ஆண்டியப்பன்...

புதன், 8 அக்டோபர், 2014

                                        துன்பமில்லை

                                 

 புயலை வெறுத்து ஒதிக்கிவிட்டால்
தென்றலின் இனிமை தெரியாதே
தோல்வியை என்னி வருத்தமென்றால்
வெற்றி என்பது கிடையாது
சோர்ந்து வீட்டில்  படுத்துவிட்டால்
சுமைகள் என்றும் குறையாதே
விழுவதை என்னி வருந்தாதே
எழுவோம் என்பதை மறவாதே 
இரவை என்னி சூரியனும்
எழுவதை நிறுத்த முடியாதே
எதையும் தாங்கும் இதயமென்றல்
துன்பம் நிலைக்க முடியாதே
                                                                                                     .....ஆண்டியப்பன் .....

திங்கள், 6 அக்டோபர், 2014

                     பெண்கொடுமை தீர்க்கலாம் வா!

                                                                           

தென்றலை விரட்டும் புயலாய்
பணித்துளி விரட்டும் சூரியனாய்
மறையும் மாலை வேளையில்
இரத்தம் சிந்தும் கீழ்வானமாய் 
துன்பத்தை மறந்து சிரிக்கும்
சித்திரப்பெண்ணே
சிரித்து மறைக்கும் துன்பத்தை
தீர்க்க நினைக்கும் பெண்ணே
விளம்பரப் பக்கத்தில் முன்னும்
வீட்டியன் அடுப்பங்கரையில் பின்னும்
இருந்ததொருகாலம் மறையட்டும்
புதுமை படைக்கலாம் வா!
புத்துலகைப் படைக்கலாம் வா!
பெண்கொடுமை தீர்க்கலாம் வா!
                                                                                           .......ஆண்டியப்பன்........

வியாழன், 2 அக்டோபர், 2014

                                 ஒளியை ஏற்று

                             


என் வாழ்வை
ஏழையாக்கிய இறைவா!
உன் நெஞ்சில் 
என் மீது ஏன் வஞ்சம்!
என் வாழ்வை
இருட்டாக்கிய இறைவா!
உனக்கென்ன பெருமை என்று 
இறைவனைத்  திட்டும்  
எதற்கும் உதவாதவனே!
சோம்பேரியாக்கும்
இருட்டை விளக்க
உழைப்பெனும்
ஒளியைஏற்று
துன்பம் என்பது
தூர ஓடும்
.                                                                                                                                                                                     .....ஆண்டியப்பன்....

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

                                          நினைவிலிடு

                                 

 முடியாதென்பதை
மூட்டை கட்டு
தோல்வி  என்பதை
தூரவிடு
இயலா எண்ணம் 
எரித்துவிட்டு
துன்பம்  என்பதை 
தூக்கிலிடு
தடைகள்  என்பதை
தவிர்த்துவிட்டு
முற்கள் முத்தமிட்டால்
தட்டிக்கோடு
மலர்கள் பக்கத்திலேதான்  இருக்கிறது
நினைவிலிடு
                                                                                                                                                                             ....ஆண்டியப்பன்.....


சனி, 27 செப்டம்பர், 2014

                                             மனைவி

                                                                Image result for new photos

சூரிய ஒளியை
சுருக்காய் மறைக்கும்
சிட்டுக்குருவி
மேகங்கள்
சந்திர வெளிச்சம்
சடுதியில்தடுக்கும்
அமாவாசை
இரவுகள்
கூடியிருந்து
மகிழ்ந்து திரிந்து
நட்பின் பின்னால்
நயவஞ்சகர்கள்
சொந்தம் சேர்த்து
பந்தம்பேசி
பாதியில்விளகும்
உறவுகள்
வஞ்சகமில்லாநெஞ்சம்
வழுக்கிவிழுஞ்தாலும்
தோல் கொடுக்க
துணைவியே துணை நின்றால்
எத்தனைமுறை விழுந்தாலும்
துவண்டுவிடாமல்
துணிந்துநிற்பேன்
என்னவளே!
                                                                                                                       ......ஆண்டியப்பன்.....

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

                                                              மாணவன்

                                 Image result for new photos

என்னுடைய கவிதைவரிகள்
சிறப்பானதாக இல்லை 
கவிதைநடை 
நன்றாகஇல்லை 
பொருள் 
தெளிவாகயில்லை
என்றுகூறும்
அறிவாளிகளே
நான் கண்ணதாசன் இல்லை
நான் வாலி இல்லை
நான் வைரமுத்து இல்லை
நான் முகவரிஇல்லாதவன்
முகவரிகொடுங்கள்
நானும் முத்தாய்
ஒளிவீசுவேன்
                                                                                                                                           .....ஆண்டியப்பன்........ 

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

                                              விவசாயி

                                         Red-eyed Tree Frog (Agalychnis callidryas), northern Costa Rica 

மேகத்தை  வரவாக்கி 

மழைத்துளியை நீராக்கி 

நிலத்திலே நீர்பாய்ச்சி

 ஏரோட்டி செராக்கி

சேற்றிலே விதைதூவி 

குழந்தையை பாதுகாக்கும் 

தாயாய் 

பயிரை பார்த்து வளர்த்து

அறுவடையில் 

சேர்த்து வைத்த 

நெர்பொதியை 

அடிமாட்டு விலைபேசி 

விற்று வந்த ஏழைக்கு 

அரசு கொடுத்தது 

கிலோ  இரண்டுரூபாய் அரிசி 

அவசர கழிவறைக்கு 

 அவசரமாய் தான்செல்ல 

கழிவறை  காவலரின் 

கதவருகே 

உண்ண  இரண்டுரூபாய் 

கழிக்க ஐந்துரூபாய் 

ஏழை என்றும் ஏழையாய் 

                                                                                                                                .....ஆண்டியப்பன் .........

http://andiappanka.blogspot.in/

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

                              நல்ல மனிதனே !

                                                                           

 

காலற்றவன் 

விபத்தில்லாமல் 

நடப்பதைப்பார் 

கண்ணற்றவன் 

சரியாக

சிந்திப்பதைப்பார்

 படிக்காதவன் 

பண்புள்ளவனாக 

வாழ்வதைப்பார் 

ஊமையானவன் 

நல்லதை 

 எழுதுவதைப்பார் 

காதுகேட்காதவன் 

நல்லதை

பெசுவதைப்பார் 

 அத்தனை உறுப்பும் 

நன்றாய்  அமைந்த 

நல்லமனிதனே!

 இத்தனையும்  

நன்றாகப்பார் 

                                                                                                                                                         ......... ஆண்டியப்பன் .........

  


சனி, 6 செப்டம்பர், 2014

 

                                        குழைந்தைகள் 

                                    

 நாங்கள்

வைரம்பாயாத 

சிறுசெடிகள் 

நாங்கள் 

காய்ந்து உதிராத 

இளங்குறுத்துகள்

நாங்கள் 

இனிமைதரும் 

காலைகதிரவர்கள் 

நாங்கள் 

இரவில் ஒளிரும் 

முழு நிலவுகள்  

நாங்கள் 

பெட்டியில் படுத்துறங்கும் 

தீக்குச்சிகள் 

எங்களை 

 விளக்கேற்ற மட்டும் 

பயன்படுத்துங்கள் 

எரிப்பதற்கல்ல 

                                                                                                                                                                   .....ஆண்டியப்பன்.....




வெள்ளி, 5 செப்டம்பர், 2014

                                            ஆசிரியன்

                                                 

                       தட்டி தட்டி 

                      அணிகலன் செய்யும் 

                       சிறந்த

                        பொற்கொல்லனாக்குபவன் 

          அடித்து உடைத்து 

          சிலை வடிக்கும் 

          சிர்பியாக்குபவன்  

          நாட்டில் பலரை 

          நாயகனாக்க 

          நாளும் பாடுபடுபவன் 

          அறியாமை போக்கி

          அறிவை புகட்டி 

          அமைதியாய் 

          இருப்பவன் 

          தென்றலாய் தவழ்தாலும் 

          புயலாய் அடித்தாலும் 

          பூகம்பமாய் வெடித்தாலும் 

          பொறுமை இலக்காதவன் 

          காந்திய வழியில் 

          கர்மமே கண்ணாய் 

          தடைகளைத்தாண்டி 

          நாட்டின் உயர்வே 

          நலனென எண்ணி 

          நாளும் உழைத்து 

          நாளைய இந்தியாவை 

          இன்றே செதுக்கும் 

          உண்மைச்சிற்பி 

          ஆசிரியன் 

            (ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் )                .....ஆண்டியப்பன் .... 

 

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

                                     ஓட்டப்பந்தையம் 

                                                                                                                           

100மீட்டர் தூரத்தை 

மெதுவாக ஓடினேன் 

ஆசிரியர் திட்டினார் 

100மீட்டர் தூரத்தை 

சிறிது வேகமாக ஓடினேன் 

ஆசிரியர் மிகக் கோபம் கொண்டு 

வீட்டு நாயை ஏவி விட்டார் 

 நான்  ஓட்டத்தில்   

சாதனை படைத்தேன் 

ஆசிரியரை புகழ்ந்துகொண்டே 

                                                                                                                                                              ....ஆண்டியப்பன் .....

 

 

 

 

 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

                                                 தீர்ப்பு                                                                                      

 நிலத்தை 
கால் புழுதியாக்கி 
விதை விதைத்து 
அறுவடைக்கு 
காத்து நிற்கும் 
உழவனாய் 
காகிதத்தில் 
கவிதை விதைத்து 
நீதிக்கூண்டில் 
நிற்கிறேன் 
வாசகனின் தீர்ப்பு 
இனிக்குமா?
கசக்குமா? 
                                                                                                                                                    .....ஆண்டியப்பன் ....

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

                                      வெற்றி என்பது 

                                                             

 சோகம் என்பதை பதிந்து விட்டால் 

இன்பம் என்பது இருக்காது 

இயலா எண்ணம் இருந்துவிட்டல்

இயலும் செயல்கள்   கிடையாதே 

போகும்பாதை குருக்கென்றல்

பாதை ஊர்போய் சேராதே 

பள்ளம் மேடு இல்லை என்றால் 

வாழ்க்கை சிறக்க முடியாதே 

போட்டிகள் இல்லா உலகத்திலே 

வாழ்க்கை உயர முடியாதே 

விழுவதை எண்ணி வருந்திவிட்டால் 

எழவும் உன்னால் முடியாதே 

இரவை எண்ணி வருத்தமென்றால்

சூரியஒளியும் பிறக்காதே 

வாழ்வில் முயற்சி இல்லைஎன்றால் 

வெற்றி என்பது கிடையாதே 

                                                                                                           ....ஆண்டியப்பன் ....

 

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

                        வாழ்ந்து காட்டுவோம் வா !

                              

 லைலா   மசுனு காதலைப் 

படித்துப்பார் 

மும்தாசுக்காக  ஷாஜகான் கட்டிய 

தாஜ்மகாளைப்பார்

அம்பிகாபதி அமராவதியின் காதலை

உற்றுப்பார்

நல தமயந்திக் காதலை 

வாசித்துப்பார் 

இறப்பும் வேதனையும் 

துயரமும் தோல்வியும் 

சூழ்ந்திருப்பதைப்பார் 

காதல் என்பது 

இறப்பதற்கு அல்ல

நாமும்  சரித்திரம் படைப்போம்  

தலைவியே !

வாழ்ந்து காட்டுவோம் வா!

                                                                                                                                               ....ஆண்டியப்பன் .......

 

 

 

சனி, 9 ஆகஸ்ட், 2014

                               இவர்கள் நல்லவயர்கள்  

காலையில்  பணம் விதைத்து  

மாலையில் வட்டியுடன் 

அறுவடை செய்யும்
இவர்கள் நல்லவர்கள் 
ஐந்தாண்டு பணிசெய்ய 
அமரும் முன்னே
தொகுதிக்கு இவ்வளவாய் 
தொகுத்து விதைத்துவிட்டு 
ஐந்தாண்டில் அறுவடை செய்யும் 
இவர்கள் நல்லவர்கள் 
பையில் பணமில்லா 
பணிக்குச்சென்று 
பேனாவால் விதைதூவி 
மாலையில் பைநிரம்ப 
அறுவடை செய்யும் 
இவர்கள் நல்லவர்கள்
எய்தவன் எங்கோ இருக்க 
அம்பது கிளையை ஒடிக்க 
செய்தது நான்னென்று 
எடுத்துக்கேள்ளும் 
இவர்கள் நல்லவர்கள் 
இத்தனையும் தான்கண்டு 
எதுத்துக் கேட்காமல் 
நடப்பது நடக்கைட்டும் 
என்றென்னி 
விழித்து தூங்கும் 
இவர்களும் நல்லவர்கள்
                                                                                                ....ஆண்டியப்பன் ....

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

                   வாழ்க்கைஎன்பது 
                    

விந்தணுவில் போட்டியிட்டேன்
தாயின் கருவறையில் குழந்தையானேன்
விளையாட்டில் போட்டி யிட்டேன்
 வேற்றிபெற்றேன்
படிக்கும்போது போட்டியிட்டேன்
மதிப்பெண் அதிகம்பெற்றேன்
மணப்பெண் பார்க்க போட்டியிட்டேன்
நல்ல மனைவியை பெற்றேன்
அன்றுதான் தெரிந்தது
நித்தம்  அவளுடன் போட்டிபேட வேண்டும் என்று
ஆமாம்
போட்டி என்பது போட்டியல்ல
பொக்கிஷம் 

                                                                                                                      கே.ஆண்டியப்பன் .....


சனி, 12 ஜூலை, 2014

                                                           உயிர்  வாழ்வதெங்கே

இந்த சாலரம் தேக்கால் செய்தது 

இந்தக்  கதவு வேம்பால் செய்தது 

இந்த  நிலை  செம்மரத்தால் செய்தது 

மரத்தை வெட்டி 

மாடி வீடு கட்டும் 

கோமான்களே 

நீங்கள் 

மாடி வீடு கட்டுங்கள் 

கூட கோபுரம்   கட்டுங்கள்                                                                                                                                        உயிரைக்    கொடுத்து                                 

 உயிரை வெட்டினால்

நீங்கள் 

உயிர் வாழ்வதெங்கே

                                                                                                                    கே.ஆண்டியப்பன்....