சாதனை படை
மனிதா! மனிதா! மயக்கமென்ன?
மனதுக்குள் இத்தனை தாக்கமென்ன?
மனமும் குணமும் இருந்தாலும்-நீ
மலைத்து நிற்பதில் நியாயமென்ன?
புல்லை வெட்டிப் போட்டலும்-அது
மீண்டும் முளைக்க மறுப்பதில்லை
முட்டிமோதி பூமிக்குள்ளே - அது
வேர்விட்டு படரா இருப்பதில்லை
மனமும் குணமும் இருந்தாலும்-நீ
மலைத்து நிற்பதில் நியாயமென்ன?
புல்லை வெட்டிப் போட்டலும்-அது
மீண்டும் முளைக்க மறுப்பதில்லை
முட்டிமோதி பூமிக்குள்ளே - அது
வேர்விட்டு படரா இருப்பதில்லை
பயந்து மரங்களெல்லாம் - கை
அசைக்கா கிளைகள் இருப்பதில்லை
சுற்றிச் சுழலும் புயலாலும் - சிறு
மலையை உடைக்க முடியவில்லை
சுட்டு எரிக்கும் சூரியனால் - அது
உயிர்களை எரித்து விடுவதில்லை
தீயில்போடும் பொருளெல்லாம் - அது
தீர்ந்து ஏரியா இருப்பதில்லை
நல்ல என்ன மனமிருக்கு -தினம்
தீயதை ஓட்ட தடை எதுக்கு
சத்தியம் தன்னை நெஞ்சிலிடு - உன்
தர்மத்தை என்றும் கையிலெடு
நாட்டுக்கு நன்மை செய்துவிடு -நய
வஞ்சகந்தன்னை அறுத்து எடு
முடக்கும் தடைகளை உடைத்துவிடு - உன்
சாதனை தன்னை படைத்துவிடு
....ஆண்டியப்பன்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக