இவர்கள் நல்லவயர்கள்
காலையில் பணம் விதைத்து
மாலையில் வட்டியுடன்
அறுவடை செய்யும்
இவர்கள் நல்லவர்கள்
ஐந்தாண்டு பணிசெய்ய
அமரும் முன்னே
தொகுதிக்கு இவ்வளவாய்
தொகுத்து விதைத்துவிட்டு
ஐந்தாண்டில் அறுவடை செய்யும்
இவர்கள் நல்லவர்கள்
பையில் பணமில்லா
பணிக்குச்சென்று
பேனாவால் விதைதூவி
மாலையில் பைநிரம்ப
அறுவடை செய்யும்
இவர்கள் நல்லவர்கள்
எய்தவன் எங்கோ இருக்க
அம்பது கிளையை ஒடிக்க
செய்தது நான்னென்று
எடுத்துக்கேள்ளும்
இவர்கள் நல்லவர்கள்
இத்தனையும் தான்கண்டு
எதுத்துக் கேட்காமல்
நடப்பது நடக்கைட்டும்
என்றென்னி
விழித்து தூங்கும்
இவர்களும் நல்லவர்கள்
....ஆண்டியப்பன் ....
1 கருத்து:
சத்தமில்லாமல் இப்படி செயல்படுவது தப்பு..
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக