பேனா!
ஓ!நெற்கதிர்களே!
உங்கள் தலைகுனிவு
எங்கள் பசியைப் போக்கும் அமுதமாகிறது!
ஓ! மரங்களே!
கனிந்து குனிவதால்
உயிகளின் சுவைமிகு உணவாகிறது!
ஓ!கருமேகங்ககே!
நீங்கள் குனிவதால்
எங்கும் பசுமை சிரிக்கிறது !
ஓ!தென்றலே !
நீ குனியும் போது
உயிர்களின் சுவாசமாகிறாய்!
ஓ!சூரியனே !
ஓ!சூரியனே !
நீ தலை குனியும் போதுதான்
பூமியே துயில்லேளுகிறது !
ஓ!எழுத்தாளர்களே!
உங்கள் பேனா குனியும்
ஒவ்வொரு முறையும்
நம் பாரதம் செழிப்பதற்காக இருக்கட்டும் !
.......ஆண்டியப்பன் ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக