விவசாயி
மேகத்தை வரவாக்கி
மழைத்துளியை நீராக்கி
நிலத்திலே நீர்பாய்ச்சி
ஏரோட்டி செராக்கி
சேற்றிலே விதைதூவி
குழந்தையை பாதுகாக்கும்
தாயாய்
பயிரை பார்த்து வளர்த்து
அறுவடையில்
சேர்த்து வைத்த
நெர்பொதியை
அடிமாட்டு விலைபேசி
விற்று வந்த ஏழைக்கு
அரசு கொடுத்தது
கிலோ இரண்டுரூபாய் அரிசி
அவசர கழிவறைக்கு
அவசரமாய் தான்செல்ல
கழிவறை காவலரின்
கதவருகே
உண்ண இரண்டுரூபாய்
கழிக்க ஐந்துரூபாய்
ஏழை என்றும் ஏழையாய்
.....ஆண்டியப்பன் .........
http://andiappanka.blogspot.in/
1 கருத்து:
உண்ண இரண்டு
கழிக்க ஐந்து
இன்றைய வாழ்வியல் யதார்த்தம்
தங்களின் வரிகளில்
முதல் முறையாய் தங்களின் தளத்திற்கு வந்தேன்
இனி தொடர்வேன் நண்பரே
கருத்துரையிடுக