இளைஞர்கள்
ஆலமரத்தையும் ஆட்டிப்பார்க்கும் தென்றல்
பெரியமரத்தில் பழுத்துத் தொங்கும் சிறு பழங்கள்
சிரிய கோடியில் காய்த்துக்கிடக்கும் பெரிய காய்கள்
நீரோடை வழிகள் அடைத்துக்கிடந்தாலும்
வேரோடை இன்றி வழிந்தோடும் மழைத்துளிகள்
வானோடு முட்டும் மலைமுகடாகிலும்
ஒளியோடை தடுக்கா ஓடி விளையாடும் சூரியஒளிகள்
சுட்டெரித்தாலும் சோர்ந்துபோகா பசுந்தளிர்கள்
பசுவுக்கு போக்குக்காட்டும் சிறுகன்றுகள்
சேட்டைகள் செய்யும் சிரியவரென்று
ஏழனப்பேச்சிங்கே வேண்டாம்
நாங்களும் நாட்டிற்காக நலம் செய்வோம்
தந்தையைக் காக்கும் தமயனாய்
தாயைக் கொஞ்சும் குழந்தையாய்
இருட்டை விரட்டும் சிறுவிளக்காய்
எங்களாலும் முடியும்
நாங்களும் சாதிப்போம் என்றும் இளைஞர்களாய்
......ஆண்டியப்பன்......
[உங்கள் மனதில் தோன்றம் கருத்தை பதிவுசெய்யுங்கள் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக