நீ! மனிதனாகலாம்
சிறு துளி நீரும் பெருவேள்ளமாகிறது
சிறு ஆறும் பெருங்கடலாகிறது
சிறு சிறு விதையும் பெருமரமாகிறது
சிறு துளி மகரந்தமும் தேனாகிறது
சிறு சிறு நெல்மணியும் நேர்குவியலாகிறது
உழைக்க மறந்த மனிதா!
சிறு உழைப்பைக் கொடுத்துப்பார்!
பெரிய சாதனை படைக்கலாம்
கூடி வாழ்ந்து பார்!
கோடி நன்மைகள் பெறலாம்
கொடுமையை மறந்து பார் !
கும்பிடும் தெய்வமாகலாம்
நல்லதை நினைத்துப்பார்!
நீ! மனிதனாகலாம்
......ஆண்டியப்பன்.......
1 கருத்து:
கருத்துரையிடுக