திங்கள், 2 பிப்ரவரி, 2015

                                         சுதந்திரம்

                                    Image result for NEW PHOTOS

தந்தை  இழந்து
தாயை  இழந்து 
தமயன் பைத்தியமாய்
துன்பங்கள் சூழ்ந்தாலும்
சுதந்திரம்  என் உரிமை என்றார்
வ.உ.சி.
உன்னஉணவில்லை
உடுத்தஉடையில்லை
பட்டினி மாறவில்லை
பாட்டெழுத மறக்கவில்லை
சுதந்திரம் என் உரிமை என்றார்
பாரதி
மீசை துடிக்க
நரம்புகள் புடைக்க
அன்னியர் ஆட்சியகற்ற
பாஞ்சாலபடை தன்னை
பாய்ந்து நடத்தினார்
கட்டப்பொம்முதுரை
உறங்க வீடின்றி
உன்ன உணவின்றி
மானமிழந்து
கற்பிழந்து
கயவனின் கைகளில்
கட்டிக்கிடந்த
பாரத தேவியை
பக்குவமாய் பெற்ற சுதந்திரம்
இன்று
66 ஆறாம் குடியரசுதினம்
கோலாகல கொண்டாட்டமாய்
இன்று  மட்டும்
நினைக்கும்
ஏழ்மைநினைவுகளுடன்
                                                                                                                                                                                    .....ஆண்டியப்பன்....                                                                                                                                                                                                        



                                                                                                                                                                                                       

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சுதந்திர தினம்
குடியரசு தினம்
என இரு நாட்களாவது நினைக்கின்றோமே,
போற்றுகிறோமே

என்ன செய்வது நண்பரே வேதனைதான்