திங்கள், 24 நவம்பர், 2014

செவ்வாய், 4 நவம்பர், 2014

                                  உழைத்துப்பார்

                            

                              

கிழக்கே சூரியன்
            உதிக்குமுன்னே
எழுவது எங்கள் மரபாகும்
மாலையில் கதிரவன்
           மறையும் பின்னே
உழைக்கும் தொழிலே உறவாகும்
உழைத்து  உழைத்து  
           ஓடாய்த்  தேய்ந்து
உடுத்த உடையும்  இல்லையடா
ஓடி ஓடி உழைத்துச் சேர்த்த
            பணத்தைக்  கேட்டால் தொல்லையடா 
மீனாய்  நீயும் பிறந்துவிட்டால் 
              எதிர் நீச்சல் போட்டுப்பார்
செடியாய்  நீயும் முளைப்பதென்றால் 
               பூமியை  வெடித்து  வெளியில்பார்
பூவாய் நீயும்  சிரிப்பதென்றால்
               மொட்டை விட்டு விரிந்துபார்
கனியாய்  கனிய  வேண்டுமென்றால்
               காயிலிருந்து பழுத்துப்பார்
வாழ்வில்  நீயும் உயர  நினைத்தால் 
               மனிதனே! நீயும்  உழைத்துப்பார்
                                                                                                                                                                                .....ஆண்டியப்பன் ......
           

திங்கள், 3 நவம்பர், 2014

                                      நியூட்டன் விதி


                              

என்முகம் பார்க்க
கண்ணாடி முன்னால் 
நான் நின்றாலும்
உன்முகம் தானே தெரிகிறது
உன்முகம் கானா
இடைவெளி நேரம்
பனிக்கூழ்கூட சுடுகிறது
என்மனம் ஏனோ
உன் நிழல்கூட
ஒட்டி ஒழிந்து கொள்கிறது
உன்முகம் பார்க்க
என் மனம் ஏனோ
ஊமை மொழியில் சிரிக்கிறது
என் விழி உன்முகம்
பதித்திடும் நேரம் 
என்மனம் பரவசமாகிறது
இருவரும் நோக்கும்
இனிமையின் நேரம்
நியூட்டனின்  விதியே நிகழ்கிறது
                                                                                                          ....ஆண்டியப்பன்....