புதன், 21 அக்டோபர், 2015

                                             கவிதை



                           
                    
                                            

     




      

 Image result for 10 most beautiful places in the world national geographicஎழுதி வச்ச காகிதமும் 
ஒரு நாளில் கிழியலாம் !
ஏங்கி நிற்கும்  கண்கள் கூட 
 இமைக்காமல்  இருக்கலாம் !
தூக்கம்  வந்து  ஏக்கம் வந்து 
கண்கள் மூடித் தூங்கலாம் !

ஏடெழுதும்  பேனாவும் 
எழுதாமல்  நிற்கலாம் !
எங்கமனம் ஒருநாளில் 
எப்படியோ மாறலாம்!
எத்திசையும்  மக்கள்  குளம் 
ஒருநாளில்  அழியலாம்!

படைக்கும் தெய்வம் திருமால்கூட 
தன்தொழிலை  மறக்கலாம் !
காக்கும் தெய்வம் பெருமாளிங்கே 
காக்காமல் இருக்கலாம் !
மூத்த தெய்வம்  சிவனே இங்கு 
தன்தொழிலை  வெறுக்கலாம்!

பேனாவில் மையும் கூட 
பேசாமல் நிற்கலாம் !
விலையில்லா  பொருள்கள் கூட 
விலையாகிப் போகலாம் !
பிறந்துவிட்ட  உயிர்கள் கூட 
ஒருநாளில்  இறக்கலாம் !

பங்காளி உறவு கூட 
பத்து நாளில் பிரியலாம் !
அண்ணன் தம்பி பாசம்கூட 
அடியோடு  அழியலாம் !
அப்பாவும் அம்மாவும் 
அன்பு பாசம் குறையலாம் !

காலங்கள்  மாறிப்போகும் 
கற்பனைகள் சிதைந்துபோகும் !
கண்ணுக்குள் ஓவியமோ 
கடுகாகி கரைந்து போகும் !
நான்படைக்கும் கவிதைகளோ 
இறப்பில்லா  காவியமாகும் !
                                                                                                                                                                 ......ஆண்டியப்பன் ......






புதன், 20 மே, 2015

                                    காதல்

                                                 
 என் தெருவை மறந்து 
உன் தெருவில் நடக்கிறேன் 
என் வீட்டை மறந்து 
உன் வீட்டைப் பார்க்கிறேன்
என் குரலை மறந்து 
உன் குரலில் பேசுகிறேன் 
என் சிரிப்பை  மறந்து 
உன் சிரிப்பிற்காக ஏங்குகிறேன் 
உன்னைத் தொடும் தென்றலைப் பார்க்க 
எனக்கு கோபம் வருகிறது 
நீ வெறுங்காலில்  நாடக்க
 என் நெஞ்சம் வகவலிக்கிறது 
என் கண்கள் 
தூக்கம்  மறுக்கிறது 
என் மனதில் 
ஏக்கம் பிறக்கிறது 
ஒரு நொடியில் கண்ணில்நுழைந்து   
யுகமாய் வாழும் 
என் இதயத்தில்        
உலகமே மகிழ்வாய் தெரிகிறது 
என்னவளே !
உன்னைப் பார்த்ததுமுதல்
                                                                                                                                                      ......ஆண்டியப்பன் ..... 

திங்கள், 18 மே, 2015

                               காதலித்துப்பார்

                                         Image result for happy face photos
மலரைக் காதலித்துப்பார்
நல்ல வாசனை கிடைக்கும் 
மரத்தைக் காதலித்துப்பார்
நல்ல  காற்று  கிடைக்கும் 
பூமியை காதலித்துப்பார்
பசுமை செழித்தோங்கும் 
காதலியை காதலித்துப்பார் 
மனசு மலரும் 
மனைவியைக்  காதலித்துப்பார் 
வாழ்க்கை  சிறக்கும் 
 குழந்தைகளை காதலித்துப்பார் 
குடும்பம்  மகிழும்  
நாட்டைக் காதலித்துப்பார்
அனைத்து உயிர்களும்  சிரிக்கும்
                                                                                                                                ........ஆண்டியப்பன்.........

திங்கள், 11 மே, 2015

                               தமிழ்ப்பெண்

                                        Image result for tamil pengal photos
குங்குமப்போட்டோ
குலைந்துபோனது
ஸ்டிக்கர் பொட்டோ
அரசாலுது
பாவாடை சட்டை 
பறந்து போனது 
மிடியும் சுடிதார்
பழக்கமானது
எங்கள் தமிழ்ப்பெண் அழகெல்லாம்
இறந்து காலம் 
ஏலேட்டானது
வெட்கம்  நாணம் 
அச்சம் மடமும் 
வெம்பிப்போகும்  காலமானது
வீரம் வேட்கை 
விவேகமெல்லாம்
வேறுவழியாய் 
எங்கோ போகுது 
தமிழகப்பெண்ணின்  
பெயரை மட்டும்
தழைத்துநிற்கும் தனிமரமாய்!
                                                                                                                                                        ......ஆண்டியப்பன்.......  

சனி, 9 மே, 2015

                                           பேனா!

                                        Image result for NATIONAL PHOTOS
ஓ!நெற்கதிர்களே!
உங்கள்  தலைகுனிவு
எங்கள் பசியைப் போக்கும் அமுதமாகிறது!
ஓ! மரங்களே!
கனிந்து குனிவதால் 
உயிகளின் சுவைமிகு  உணவாகிறது!
ஓ!கருமேகங்ககே!
நீங்கள் குனிவதால் 
எங்கும் பசுமை சிரிக்கிறது !
ஓ!தென்றலே !
நீ  குனியும் போது
உயிர்களின் சுவாசமாகிறாய்!
ஓ!சூரியனே !
நீ தலை குனியும் போதுதான்
பூமியே துயில்லேளுகிறது !
ஓ!எழுத்தாளர்களே!
உங்கள் பேனா  குனியும் 
ஒவ்வொரு முறையும் 
நம்  பாரதம் செழிப்பதற்காக இருக்கட்டும் !
                                                                                                                                                                                              .......ஆண்டியப்பன் ......

திங்கள், 4 மே, 2015

                                       வெண்சுருட்டு

                                   Image result for smoking style photos
நீங்கள்  கெடுவதுடன் 
வாரிசும்  கெடும் கொடியவிஷம்
கேடுகளை ஒழிக்க 
ஆங்காங்கே விளம்பரங்கள்  
தீமையை ஒழிக்க 
குறும்படங்கள் 
கெட்டதை  ஒழிக்க 
தேசம் செலவு செய்யும் 
பல்லாயிரம் கோடிகள் 
தினம் தினம் பார்த்தாலும்
திருந்துவது என்னவோ!
கானல் நீராய்
பத்து விரலில் பாங்காய் உழைத்து 
இரண்டு விரலாய் எரித்துக்கெடுக்கும்
அன்பு உள்ளங்களே 
கெட்டதை  விடுத்து 
நல்லதை எடுங்கள் 
புதிதாய் மலரட்டும் வாழ்க்கை
                                                                                                                                                                            ........ஆண்டியப்பன்...........

ஞாயிறு, 3 மே, 2015


                                    உழைப்பாளிகள்

                                                Image result for worker photo

குளிரில்  தழுவி 
வெப்பத்தில்  நனைந்து 
இதமாய்  முடியும்  தென்றலே !
பூபாலத்தில்  தொடங்கி 
யுத்தம்  முடித்து 
மறைந்து விழிக்கும் சூரியனே 
கூடுவிட்டு பறந்து சென்று 
கூட்டாக சோறும் உண்டு 
மயக்கும் மாலை 
மகிழ்வாய்  வீடுவரும்  பறவைகளே!
உங்களுக்குள் ஏற்ற  இரக்கமில்லை 
அத்தனையும் சமமாகும்.  
ஆனால் 
நேரம் பிரித்தளித்து 
ஓய்வு புறந்தள்ளி 
உழைப்பைக் கொடுத்த  மனிதனுக்கு 
பதவிவாரியாய்  பரிசளிப்பு 
உயர்ந்தோன் தாழ்ந்தோன்னென 
உழைப்பைக் கொடுக்கும் உழைப்பாளிக்கு
ஒதுக்கப்பர்டது  100%
30%சதம் மட்டுமே 
பெற்றது போதும் புறந்தள்ள  தயாரில்லை 
எங்கள் குழந்தையும் சிரகடிக்கவேண்டும் 
நாங்கள் உழைப்பாளிகள். 
                                                                                                     ........ஆண்டியப்பன் ........

திங்கள், 23 மார்ச், 2015

                                     காற்றே! காற்றே!

                                 Image result for 3d animated mobile wallpapers free download

காற்றே காற்றே கண்ணுக்குள்ளே
               ஒழிந்தே  இருப்பாயா?
காற்றே நீயும்  நெஞ்சப் பையில் 
                குடிகொண்டிருப்பாயா?
காற்றே  நீயும் மெய் தொட்டு பயில
                என்னுடன்  வருவாயா?
காற்றே  நீயும் தலைவியின்  உடம்பை
                 தொட்டுப்பார்த்தாயா?
நீ பஞ்ச பூதத்தை  அவளில் கண்டு 
                  புயலாய் ஆனாயா?
நீ சுழன்று வீசும் சுறாவளியாய் 
                  சுற்றித்திரிந்தாயா?
என்னவள் சிரிப்பை கண்டதும்  நீயும் 
                  தென்றல்லானாயா?  
நீ  மலரில்  விழுந்து  மனதில் எழுந்து 
                  கவிதையானாயா?
           நீ  கவிதையானையா?
                                                                                                      ......க.ஆண்டியப்பன் .......

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

                                             ஆசிரியார்   

                                Image result for super photos    

ஆசிரியர் மாணவர்களை 
மருத்துவர்களாக ஆக்குகிறார்
பொறியாளர்களாக ஆக்குகிறார்
மொழியாளர்களாக ஆக்குகிறார்
விவசாய அலுவலர்களாக  ஆக்குகிறார்
விஞ்ஞானிக்களாக ஆக்குகிறார்
படிப்பில் சிறந்த மாணவர்களாக ஆக்குகிறார்
ஆனால்
சுயசிந்தனை உடையவனாக 
சுதந்திரமாக செயல்படுபவனாக
பொதுவில் 
மனிதனாக மட்டும் ஆக்கும் நிலையை தவிர
                                                                                                                                                                             .....ஆண்டியப்பன் ......

சனி, 7 பிப்ரவரி, 2015

                             நீ! மனிதனாகலாம் 

                          

சிறு துளி நீரும்  பெருவேள்ளமாகிறது 
சிறு ஆறும்  பெருங்கடலாகிறது 
சிறு சிறு விதையும் பெருமரமாகிறது  
சிறு துளி மகரந்தமும் தேனாகிறது 
சிறு சிறு நெல்மணியும் நேர்குவியலாகிறது 
உழைக்க மறந்த  மனிதா!
சிறு உழைப்பைக் கொடுத்துப்பார்!
பெரிய சாதனை  படைக்கலாம்
கூடி வாழ்ந்து பார்!
கோடி நன்மைகள்  பெறலாம் 
கொடுமையை மறந்து பார் !
கும்பிடும் தெய்வமாகலாம்
நல்லதை நினைத்துப்பார்!
நீ! மனிதனாகலாம்
                                                                                                                                                                                      
                                                                                                                                                                    ......ஆண்டியப்பன்.......

புதன், 4 பிப்ரவரி, 2015

                             சூரியன் சுட்டெரிக்கும் 

 பசுமை படர்ந்து 
 பக்குவமாய் பல்லிளிக்கும் 
பசும்புற்கள்
புல்லின்  நுனியில் 
கொண்டையிட்டுஅமர்ந்திருக்கும் 
பனித்துளிகள் 
இன்ப சுகத்தை 
இனிதே  தாலாட்டும் 
இலைகளின் அசைவுகள்
விழித்திடும்  பறவைகள் 
விம்மிடும் ஓசையின் 
வியக்கவைக்கும் சங்கீத மழை
வேதனை மறந்து 
பனித்துளிதொட்டு 
பக்குவமாய் பறந்துவரும்
தெவிட்டாத தென்றலின் இனிமை
இருளை விளக்கி 
ஒளிக் கற்றையாய் வெளிவரும் 
சூரியன் 
அத்தனையும் இனிமைதான் 
சூரியன் சுட்டேரிக்கும்வரை
                                                                                                     ....ஆண்டியப்பன்.......

திங்கள், 2 பிப்ரவரி, 2015

                                         சுதந்திரம்

                                    Image result for NEW PHOTOS

தந்தை  இழந்து
தாயை  இழந்து 
தமயன் பைத்தியமாய்
துன்பங்கள் சூழ்ந்தாலும்
சுதந்திரம்  என் உரிமை என்றார்
வ.உ.சி.
உன்னஉணவில்லை
உடுத்தஉடையில்லை
பட்டினி மாறவில்லை
பாட்டெழுத மறக்கவில்லை
சுதந்திரம் என் உரிமை என்றார்
பாரதி
மீசை துடிக்க
நரம்புகள் புடைக்க
அன்னியர் ஆட்சியகற்ற
பாஞ்சாலபடை தன்னை
பாய்ந்து நடத்தினார்
கட்டப்பொம்முதுரை
உறங்க வீடின்றி
உன்ன உணவின்றி
மானமிழந்து
கற்பிழந்து
கயவனின் கைகளில்
கட்டிக்கிடந்த
பாரத தேவியை
பக்குவமாய் பெற்ற சுதந்திரம்
இன்று
66 ஆறாம் குடியரசுதினம்
கோலாகல கொண்டாட்டமாய்
இன்று  மட்டும்
நினைக்கும்
ஏழ்மைநினைவுகளுடன்
                                                                                                                                                                                    .....ஆண்டியப்பன்....                                                                                                                                                                                                        



                                                                                                                                                                                                       

திங்கள், 5 ஜனவரி, 2015

                                    இளைஞர்கள்

                        

 ஆலமரத்தையும் ஆட்டிப்பார்க்கும் தென்றல்
பெரியமரத்தில் பழுத்துத் தொங்கும் சிறு பழங்கள்
சிரிய கோடியில்  காய்த்துக்கிடக்கும் பெரிய காய்கள் 
நீரோடை வழிகள்  அடைத்துக்கிடந்தாலும்
வேரோடை இன்றி வழிந்தோடும் மழைத்துளிகள்
வானோடு முட்டும் மலைமுகடாகிலும்
ஒளியோடை தடுக்கா ஓடி விளையாடும்  சூரியஒளிகள்
சுட்டெரித்தாலும்  சோர்ந்துபோகா பசுந்தளிர்கள்
பசுவுக்கு போக்குக்காட்டும்  சிறுகன்றுகள்
சேட்டைகள் செய்யும் சிரியவரென்று 
ஏழனப்பேச்சிங்கே வேண்டாம்  
நாங்களும்  நாட்டிற்காக நலம்  செய்வோம் 
தந்தையைக் காக்கும் தமயனாய்
தாயைக் கொஞ்சும் குழந்தையாய்
இருட்டை விரட்டும் சிறுவிளக்காய் 
எங்களாலும் முடியும் 
நாங்களும் சாதிப்போம் என்றும் இளைஞர்களாய்
                                                                                                                                                                                                           ......ஆண்டியப்பன்......
[உங்கள் மனதில் தோன்றம் கருத்தை பதிவுசெய்யுங்கள் ]