வெண்சுருட்டு
நீங்கள் கெடுவதுடன்
வாரிசும் கெடும் கொடியவிஷம்
கேடுகளை ஒழிக்க
ஆங்காங்கே விளம்பரங்கள்
தீமையை ஒழிக்க
குறும்படங்கள்
கெட்டதை ஒழிக்க
தேசம் செலவு செய்யும்
பல்லாயிரம் கோடிகள்
தினம் தினம் பார்த்தாலும்
திருந்துவது என்னவோ!
கானல் நீராய்
பத்து விரலில் பாங்காய் உழைத்து
இரண்டு விரலாய் எரித்துக்கெடுக்கும்
அன்பு உள்ளங்களே
கெட்டதை விடுத்து
நல்லதை எடுங்கள்
புதிதாய் மலரட்டும் வாழ்க்கை
........ஆண்டியப்பன்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக