உழைப்பாளிகள்
குளிரில் தழுவி
வெப்பத்தில் நனைந்து
இதமாய் முடியும் தென்றலே !
பூபாலத்தில் தொடங்கி
யுத்தம் முடித்து
மறைந்து விழிக்கும் சூரியனே
கூடுவிட்டு பறந்து சென்று
கூட்டாக சோறும் உண்டு
மயக்கும் மாலை
மகிழ்வாய் வீடுவரும் பறவைகளே!
உங்களுக்குள் ஏற்ற இரக்கமில்லை
அத்தனையும் சமமாகும்.
ஆனால்
நேரம் பிரித்தளித்து
ஓய்வு புறந்தள்ளி
உழைப்பைக் கொடுத்த மனிதனுக்கு
பதவிவாரியாய் பரிசளிப்பு
உயர்ந்தோன் தாழ்ந்தோன்னென
உழைப்பைக் கொடுக்கும் உழைப்பாளிக்கு
ஒதுக்கப்பர்டது 100%
30%சதம் மட்டுமே
பெற்றது போதும் புறந்தள்ள தயாரில்லை
எங்கள் குழந்தையும் சிரகடிக்கவேண்டும்
நாங்கள் உழைப்பாளிகள்.
........ஆண்டியப்பன் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக