கவிதை
எழுதி வச்ச காகிதமும்
ஒரு நாளில் கிழியலாம் !
ஏங்கி நிற்கும் கண்கள் கூட
இமைக்காமல் இருக்கலாம் !
தூக்கம் வந்து ஏக்கம் வந்து
கண்கள் மூடித் தூங்கலாம் !
ஏடெழுதும் பேனாவும்
எழுதாமல் நிற்கலாம் !
எங்கமனம் ஒருநாளில்
எப்படியோ மாறலாம்!
எத்திசையும் மக்கள் குளம்
ஒருநாளில் அழியலாம்!
படைக்கும் தெய்வம் திருமால்கூட
தன்தொழிலை மறக்கலாம் !
காக்கும் தெய்வம் பெருமாளிங்கே
காக்காமல் இருக்கலாம் !
மூத்த தெய்வம் சிவனே இங்கு
தன்தொழிலை வெறுக்கலாம்!
பேனாவில் மையும் கூட
பேசாமல் நிற்கலாம் !
விலையில்லா பொருள்கள் கூட
விலையாகிப் போகலாம் !
பிறந்துவிட்ட உயிர்கள் கூட
ஒருநாளில் இறக்கலாம் !
பங்காளி உறவு கூட
பத்து நாளில் பிரியலாம் !
அண்ணன் தம்பி பாசம்கூட
அடியோடு அழியலாம் !
அப்பாவும் அம்மாவும்
அன்பு பாசம் குறையலாம் !
காலங்கள் மாறிப்போகும்
கற்பனைகள் சிதைந்துபோகும் !
கண்ணுக்குள் ஓவியமோ
கடுகாகி கரைந்து போகும் !
நான்படைக்கும் கவிதைகளோ
இறப்பில்லா காவியமாகும் !
......ஆண்டியப்பன் ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக