புதன், 3 ஜனவரி, 2018

                                              கனவு 

                              

நான் கண்டேன் நானே கண்டேன் 
செல்வந்தன் ஆகக்கண்டேன் 
செல்வத்தை அள்ளி எடுத்து 
ஊருக்குள் போகக்கண்டேன் 
பசி இல்லை  பட்டினி இல்லை 
பரதேசி எங்கும்மில்லை 
உணவுக்குப்  பஞ்சம்மில்லை
உடுத்த ஆடை குறைவேயில்லை
முகத்திலே சொகம்மில்லை 
உள்ளத்தில்  துன்பமில்லை 
தெருவோரம் தூங்கும் மக்கள் 
திரும்பிய பக்கம்மில்லை 
வீடுகள் இல்லா இடமே 
கண்ணுக்குள்  கிடைக்கவில்லை 
வீடின்றி மக்கள் இங்கே 
என்னாட்டில் யாருமில்லை
ஊருக்குள்  சாதிச்சண்டை
உண்மையாய் இல்லை இல்லை 
சாதிப்பேச்சு ஏதுமில்லை 
சண்டைகளும் இல்லையே  இல்லை 
மதம்மென்று எதுவும்மில்லை 
மனிதம்மிங்கு மாறவில்லை 
அரசியலில் பேதமில்லை  
ஆழ்வோரில் தீமையில்லை  
அகிம்சை வழி  மாறவில்லை  
அமைதிக்கிங்கே பங்கம்மில்லை 
சூரியனே சுட்டால்கூட 
உடல்சூடு பட்டதில்லை 
சந்திரனே எங்கள் வீட்டில் 
தங்காமல் சென்றதில்லை 
தென்றல் கூட தெருவோரம் 
தாலாட்டுப்  பாடல்பாடும் 
இடிமின்னல் ஓசை கூட 
சங்கீதம்மாகிப்போகும் 
மழை நீரே மண்ணில்வந்து 
மாக்கோலம் வீட்டில்போடும் 
அருவியில் குதிக்கும் நீரே 
ஆறாக  ஓடக்கண்டேன் 
அத்தனையும் கனவில் கண்டேன் 
ஆனந்தம் நெஞ்சில் கொண்டேன் 
கண்விழித்து பார்க்குபோது 
தெருவோரம் நான்கிடந்தேன்  
தெருவோரம் நான்கிடந்தேன்
                                                                       .......க.ஆண்டியப்பன் ......... 

திங்கள், 1 ஜனவரி, 2018

                                          

                                                   

                                                  புத்தாண்டு 

                              

                                                          


                                                                      

ஓர் ஆண்டு 
365 நாட்கள் 
ஓடி மறைந்தது
ஒன்றும்  புரியவில்லை 
விடிந்ததைப்  பார்த்தோம் 
விழுந்ததைப்  பார்த்தோம் 
வேள்விகள் செய்தோம் 
கேள்விகள் கேட்டோம் 
தோல்விகள் பெற்றோம் 
வெற்றியைத்  தொட்டோம் 
சிரித்து எத்தனை நாள் 
அழுது எத்தனை நாள் 
புலம்பியது எத்தனை நாள் 
கனவு கண்டது  எத்தனை நாள் 
கவிபுனைந்தது  எத்தனை நாள் 
சிறுமை பெற்றது  எத்தனை நாள் 
பெறுமை பெற்றது எத்தனை நாள் 
கல்வி கற்றது  எத்தனை நாள் 
கட்டிலின்னருகில்  இருந்தும் 
கண்டு மறந்தோம் 
கட்டில் தூக்கம் வெட்டி எரிந்தோம் 
என்னக்கனவில் முழ்கி எழுந்தோம் 
பிள்ளைகள் கண்டு பெருமிதம் கொண்டும் 
பெற்றவள் அன்பை கொட்டி எடுத்தோம் 
ஒருதுளி  நேரம் ஓடி  ஒளியும் 
ஒவ்வொரு நாளும் கடுகாய்  மறையும் 
வேருள்ள செடியும் விழுதாய் மாறும் 
மரமும் ஒருநாள் முதுமை  அடையும் 
எழுகின்ற சூரியன்  விழுவது தெரியும் 
வளர்கின்ற சந்திரன் தேய்வது  புரியும் 
சாதியை  விட்டு மதங்களை விட்டு 
துன்பத்தை விட்டு துரோகத்தை விட்டு 
பொய்மையை விட்டு வாய்மையை தொட்டு 
உண்மையும் நேர்மையும் ஒன்றாய் நின்று 
உயிர்களை கொள்ளும் கயமையை கொன்று 
நல்லதை செய்து மனங்கில் நின்று 
ஓடிய மணித்துளி கிடைப்பதும்மில்லை 
நேற்றைய நாட்கள் இன்றதுமில்லை 
நாளை என்பது நம்கையில்லில்லை 
பிறப்பில் தோன்றி  இறப்பில் முடியும் 
என்பதை மனிதா நீயும் அறிவாய் 
இடைப்பட்ட நாட்களில் வாழ்ந்திட வேண்டும் 
வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திட வேண்டும் 
நேற்றையமனித்துளி  முடிந்ததாய் இருக்கட்டும் 
இன்றைய பொழுது நன்றாய் நடக்கட்டும் 
எந்நாளும் இன்பம் எங்கும் நிலைக்கட்டும் 
                                                                                      
                                                                                    க.ஆண்டியப்பன் 

வெள்ளி, 24 மார்ச், 2017


மலர்களின் மகரந்தத்தை எடுக்கும் 
வளைக்கரம் சுமப்பதும் 
ஒரு சுகமே !
பூக்களே!
 நாங்களும் வீழ்வோம் 
என்பதை அறிந்தும் 
காய்களை உற்பத்தி செய்வதும் 
ஒரு சுகமே !
காய்களும் ஒருநாள் முதிர்வோம் 
என்பதை அறிந்து 
காய்களும்  கனிவது 
ஒரு சுகமே!
கனியும் ஒருநாள் விதையாவோம் 
என்பதை அறிந்தும் 
பூமியில் விழுந்து முளைப்பதும் 
ஒரு சுகமே !
அக்கா, தங்கை, அண்ணன் ,தம்பி 
கூட்டுக்குடும்பத்தின் 
இன்பதுன்பத்தின் எல்லா நிலையிலும் 
இன்பத்தை மட்டும் சுமப்பதும் 
ஒரு சுகமே !

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

                             அரசியல் வாதிகள்

                                      Image result for nacher wallpaper



விடியும் முன்னே 
வீட்டின் 
சன்னல் வியர்க்கும் 
நீர்த்துளி 
முன்பனிக்காலம்
காலை வேலை 
கதிரவன் உதிக்கும் 
கதிரொளி பட்டால் 
உடம்பே இனிக்கும் 
இளவேனில் காலம் 
இயற்கையே 
நீகூட !
மனிதனை  வாழவைக்கிராய்
ஆனால் 
எதிர் கச்சியாய் இருந்து 
எங்கள் குறை கேட்டும்
ஆளும் கட்சியானால்
அத்தனையும் மறக்கும் 
எங்கள் அரசியல்வாதிகள் 
எங்களுக்காகவே வாழ்கிறார்கள் 
உயிரை உரிக்கும் 
உத்தமர்கள்
                                                                                                                                         .....ஆண்டியப்பன்.....

புதன், 21 அக்டோபர், 2015

                                             கவிதை



                           
                    
                                            

     




      

 Image result for 10 most beautiful places in the world national geographicஎழுதி வச்ச காகிதமும் 
ஒரு நாளில் கிழியலாம் !
ஏங்கி நிற்கும்  கண்கள் கூட 
 இமைக்காமல்  இருக்கலாம் !
தூக்கம்  வந்து  ஏக்கம் வந்து 
கண்கள் மூடித் தூங்கலாம் !

ஏடெழுதும்  பேனாவும் 
எழுதாமல்  நிற்கலாம் !
எங்கமனம் ஒருநாளில் 
எப்படியோ மாறலாம்!
எத்திசையும்  மக்கள்  குளம் 
ஒருநாளில்  அழியலாம்!

படைக்கும் தெய்வம் திருமால்கூட 
தன்தொழிலை  மறக்கலாம் !
காக்கும் தெய்வம் பெருமாளிங்கே 
காக்காமல் இருக்கலாம் !
மூத்த தெய்வம்  சிவனே இங்கு 
தன்தொழிலை  வெறுக்கலாம்!

பேனாவில் மையும் கூட 
பேசாமல் நிற்கலாம் !
விலையில்லா  பொருள்கள் கூட 
விலையாகிப் போகலாம் !
பிறந்துவிட்ட  உயிர்கள் கூட 
ஒருநாளில்  இறக்கலாம் !

பங்காளி உறவு கூட 
பத்து நாளில் பிரியலாம் !
அண்ணன் தம்பி பாசம்கூட 
அடியோடு  அழியலாம் !
அப்பாவும் அம்மாவும் 
அன்பு பாசம் குறையலாம் !

காலங்கள்  மாறிப்போகும் 
கற்பனைகள் சிதைந்துபோகும் !
கண்ணுக்குள் ஓவியமோ 
கடுகாகி கரைந்து போகும் !
நான்படைக்கும் கவிதைகளோ 
இறப்பில்லா  காவியமாகும் !
                                                                                                                                                                 ......ஆண்டியப்பன் ......






புதன், 20 மே, 2015

                                    காதல்

                                                 
 என் தெருவை மறந்து 
உன் தெருவில் நடக்கிறேன் 
என் வீட்டை மறந்து 
உன் வீட்டைப் பார்க்கிறேன்
என் குரலை மறந்து 
உன் குரலில் பேசுகிறேன் 
என் சிரிப்பை  மறந்து 
உன் சிரிப்பிற்காக ஏங்குகிறேன் 
உன்னைத் தொடும் தென்றலைப் பார்க்க 
எனக்கு கோபம் வருகிறது 
நீ வெறுங்காலில்  நாடக்க
 என் நெஞ்சம் வகவலிக்கிறது 
என் கண்கள் 
தூக்கம்  மறுக்கிறது 
என் மனதில் 
ஏக்கம் பிறக்கிறது 
ஒரு நொடியில் கண்ணில்நுழைந்து   
யுகமாய் வாழும் 
என் இதயத்தில்        
உலகமே மகிழ்வாய் தெரிகிறது 
என்னவளே !
உன்னைப் பார்த்ததுமுதல்
                                                                                                                                                      ......ஆண்டியப்பன் ..... 

திங்கள், 18 மே, 2015

                               காதலித்துப்பார்

                                         Image result for happy face photos
மலரைக் காதலித்துப்பார்
நல்ல வாசனை கிடைக்கும் 
மரத்தைக் காதலித்துப்பார்
நல்ல  காற்று  கிடைக்கும் 
பூமியை காதலித்துப்பார்
பசுமை செழித்தோங்கும் 
காதலியை காதலித்துப்பார் 
மனசு மலரும் 
மனைவியைக்  காதலித்துப்பார் 
வாழ்க்கை  சிறக்கும் 
 குழந்தைகளை காதலித்துப்பார் 
குடும்பம்  மகிழும்  
நாட்டைக் காதலித்துப்பார்
அனைத்து உயிர்களும்  சிரிக்கும்
                                                                                                                                ........ஆண்டியப்பன்.........