திங்கள், 1 ஜனவரி, 2018

                                          

                                                   

                                                  புத்தாண்டு 

                              

                                                          


                                                                      

ஓர் ஆண்டு 
365 நாட்கள் 
ஓடி மறைந்தது
ஒன்றும்  புரியவில்லை 
விடிந்ததைப்  பார்த்தோம் 
விழுந்ததைப்  பார்த்தோம் 
வேள்விகள் செய்தோம் 
கேள்விகள் கேட்டோம் 
தோல்விகள் பெற்றோம் 
வெற்றியைத்  தொட்டோம் 
சிரித்து எத்தனை நாள் 
அழுது எத்தனை நாள் 
புலம்பியது எத்தனை நாள் 
கனவு கண்டது  எத்தனை நாள் 
கவிபுனைந்தது  எத்தனை நாள் 
சிறுமை பெற்றது  எத்தனை நாள் 
பெறுமை பெற்றது எத்தனை நாள் 
கல்வி கற்றது  எத்தனை நாள் 
கட்டிலின்னருகில்  இருந்தும் 
கண்டு மறந்தோம் 
கட்டில் தூக்கம் வெட்டி எரிந்தோம் 
என்னக்கனவில் முழ்கி எழுந்தோம் 
பிள்ளைகள் கண்டு பெருமிதம் கொண்டும் 
பெற்றவள் அன்பை கொட்டி எடுத்தோம் 
ஒருதுளி  நேரம் ஓடி  ஒளியும் 
ஒவ்வொரு நாளும் கடுகாய்  மறையும் 
வேருள்ள செடியும் விழுதாய் மாறும் 
மரமும் ஒருநாள் முதுமை  அடையும் 
எழுகின்ற சூரியன்  விழுவது தெரியும் 
வளர்கின்ற சந்திரன் தேய்வது  புரியும் 
சாதியை  விட்டு மதங்களை விட்டு 
துன்பத்தை விட்டு துரோகத்தை விட்டு 
பொய்மையை விட்டு வாய்மையை தொட்டு 
உண்மையும் நேர்மையும் ஒன்றாய் நின்று 
உயிர்களை கொள்ளும் கயமையை கொன்று 
நல்லதை செய்து மனங்கில் நின்று 
ஓடிய மணித்துளி கிடைப்பதும்மில்லை 
நேற்றைய நாட்கள் இன்றதுமில்லை 
நாளை என்பது நம்கையில்லில்லை 
பிறப்பில் தோன்றி  இறப்பில் முடியும் 
என்பதை மனிதா நீயும் அறிவாய் 
இடைப்பட்ட நாட்களில் வாழ்ந்திட வேண்டும் 
வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திட வேண்டும் 
நேற்றையமனித்துளி  முடிந்ததாய் இருக்கட்டும் 
இன்றைய பொழுது நன்றாய் நடக்கட்டும் 
எந்நாளும் இன்பம் எங்கும் நிலைக்கட்டும் 
                                                                                      
                                                                                    க.ஆண்டியப்பன் 

கருத்துகள் இல்லை: