புதன், 3 ஜனவரி, 2018

                                              கனவு 

                              

நான் கண்டேன் நானே கண்டேன் 
செல்வந்தன் ஆகக்கண்டேன் 
செல்வத்தை அள்ளி எடுத்து 
ஊருக்குள் போகக்கண்டேன் 
பசி இல்லை  பட்டினி இல்லை 
பரதேசி எங்கும்மில்லை 
உணவுக்குப்  பஞ்சம்மில்லை
உடுத்த ஆடை குறைவேயில்லை
முகத்திலே சொகம்மில்லை 
உள்ளத்தில்  துன்பமில்லை 
தெருவோரம் தூங்கும் மக்கள் 
திரும்பிய பக்கம்மில்லை 
வீடுகள் இல்லா இடமே 
கண்ணுக்குள்  கிடைக்கவில்லை 
வீடின்றி மக்கள் இங்கே 
என்னாட்டில் யாருமில்லை
ஊருக்குள்  சாதிச்சண்டை
உண்மையாய் இல்லை இல்லை 
சாதிப்பேச்சு ஏதுமில்லை 
சண்டைகளும் இல்லையே  இல்லை 
மதம்மென்று எதுவும்மில்லை 
மனிதம்மிங்கு மாறவில்லை 
அரசியலில் பேதமில்லை  
ஆழ்வோரில் தீமையில்லை  
அகிம்சை வழி  மாறவில்லை  
அமைதிக்கிங்கே பங்கம்மில்லை 
சூரியனே சுட்டால்கூட 
உடல்சூடு பட்டதில்லை 
சந்திரனே எங்கள் வீட்டில் 
தங்காமல் சென்றதில்லை 
தென்றல் கூட தெருவோரம் 
தாலாட்டுப்  பாடல்பாடும் 
இடிமின்னல் ஓசை கூட 
சங்கீதம்மாகிப்போகும் 
மழை நீரே மண்ணில்வந்து 
மாக்கோலம் வீட்டில்போடும் 
அருவியில் குதிக்கும் நீரே 
ஆறாக  ஓடக்கண்டேன் 
அத்தனையும் கனவில் கண்டேன் 
ஆனந்தம் நெஞ்சில் கொண்டேன் 
கண்விழித்து பார்க்குபோது 
தெருவோரம் நான்கிடந்தேன்  
தெருவோரம் நான்கிடந்தேன்
                                                                       .......க.ஆண்டியப்பன் ......... 

கருத்துகள் இல்லை: