திங்கள், 24 நவம்பர், 2014
செவ்வாய், 4 நவம்பர், 2014
உழைத்துப்பார்
கிழக்கே சூரியன்
உதிக்குமுன்னே
எழுவது எங்கள் மரபாகும்
மாலையில் கதிரவன்
மறையும் பின்னே
உழைக்கும் தொழிலே உறவாகும்
உழைத்து உழைத்து
ஓடாய்த் தேய்ந்து
உடுத்த உடையும் இல்லையடா
ஓடி ஓடி உழைத்துச் சேர்த்த
பணத்தைக் கேட்டால் தொல்லையடா
மீனாய் நீயும் பிறந்துவிட்டால்
எதிர் நீச்சல் போட்டுப்பார்
செடியாய் நீயும் முளைப்பதென்றால்
பூமியை வெடித்து வெளியில்பார்
பூவாய் நீயும் சிரிப்பதென்றால்
மொட்டை விட்டு விரிந்துபார்
கனியாய் கனிய வேண்டுமென்றால்
காயிலிருந்து பழுத்துப்பார்
வாழ்வில் நீயும் உயர நினைத்தால்
மனிதனே! நீயும் உழைத்துப்பார்
.....ஆண்டியப்பன் ......
திங்கள், 3 நவம்பர், 2014
நியூட்டன் விதி
என்முகம் பார்க்க
கண்ணாடி முன்னால்
நான் நின்றாலும்
உன்முகம் தானே தெரிகிறது
உன்முகம் கானா
இடைவெளி நேரம்
பனிக்கூழ்கூட சுடுகிறது
என்மனம் ஏனோ
உன் நிழல்கூட
ஒட்டி ஒழிந்து கொள்கிறது
உன்முகம் பார்க்க
என் மனம் ஏனோ
ஊமை மொழியில் சிரிக்கிறது
என் விழி உன்முகம்
பதித்திடும் நேரம்
என்மனம் பரவசமாகிறது
இருவரும் நோக்கும்
இனிமையின் நேரம்
நியூட்டனின் விதியே நிகழ்கிறது
....ஆண்டியப்பன்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)