கொண்டாட்டம்
பூந் தோட்டத்தில்நின்று பார்
நினைவெள்ளம் வாசம் வீசும்
பசுங் கூட்டத்தை
உற்றுப்பார்
கன்றுகளின் மகிழ்ச்சி தெரியும்
சிறு விதையை
உற்றுப்பார்
பெரிய மரத்தின் வேர்கள் தெரியும்
தாய் தந்தையறை
உற்றுப்பார்
அவர்களின் தியாகம் தெரியும்
தாய் தந்தையரின்
மடியில் படுத்துப்பார்
மகிழ்ச்சியின் மான்பு புரியும்
திந்தமிழை
தின்றுப்பார்
செந்தமிழும் தேனாய் இனிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக