செவ்வாய், 10 டிசம்பர், 2013

வேர்கள் வெளியே தெரிவதில்லை






















படித்து செழித்த
படைப்பாளி
கூறினான்
செடிக்குள்ளே
இலை இருக்கிறதாம்
இலைக்குள்ளே பூ இருக்கிறதாம்
பூவுக்குளே காய் இருக்கிறதாம்
காய்க்குள்ளே கனி இருக்கிறதாம்
வாலிபச் செடியில்
வளங்கள் அனைத்தும்
ஒருநாள் தெரியும்
ஆனால்
அத்துனை சிறப்புக்கும்
அடித்தளமிடும்
வேர்கள் வெளியே தெரிவதில்லை
அப்படிதான்
ஆசிரியர்களும்

+++ஆண்டியப்பன்+++

வெற்றி நிச்சயம்














பூமி வெடித்துத்தான்
முளைகள் வெளிவரும்
முளை வெடித்தால்தான்
இலை வெளி வரும்
இலை உதிர்ந்தால்தான்
செடி கிளைவிடும்
கிளை விரிந்தால்தான்
பூக்கள் வெளிவரும்
பூக்கள் உதிர்ந்தால்தான்
காய்கள் வெளிவரும்
காய்கள் பழுத்தால்தான்
விதைகள் வெளிப்படும்
மனிதனே!
நீ விழுந்தால்தான்
எழும் எண்ணம்
வெளிப்படும்.
தோல்வி கிடைத்தால்தான்
வெற்றி
உன்வசப்படும்
தோல்வியை நோக்கி
பயணம் செய்
\வெற்றி நிச்சயம்

+++ ஆண்டியப்பன்++++


ஞாயிறு, 1 டிசம்பர், 2013

உற்றுப்பார் உண்மை தெரியும்



கால்கள் இல்லை என்று
கவலை கொள்ளாதே.

கண்களும் இல்லாமல் வாழ்கிறார்கள்.

நடந்துபார்
வழுக்கள் நிலமும் வழிவிடும்

தட்டிப்பார்
கதவுகள் திறக்கும்.

கேட்டுப்பார்
கேட்டது கிடைக்கும்.

விழித்துப்பார்
இந்த உலகம் தெரியும்.

உற்றுப் பார் உண்மை தெரியும்

மனிதனே
உழைத்துப் பார்
வெற்றியின் ரகசியம் தெரியும்

ஆண்டியப்பன். க