இவர்கள் முட்டாள்கள்
பெண்ணே !
உனக்கு வளர்பிறை நெற்றியாம்
பெண்ணே!
உன் கண்கள் நாவல் பழமாம்
பெண்ணே!
உன் இதழ்கள் கோவை இதழ்களாம்
பெண்ணே!
உன் இடை கோடியிடையாம்
பெண்ணே!
உன் நடை அன்ன நடையாம்
ஆணை மிஞ்சி
சாதிக்கும் உன்னை
அழகு பதுமையாய் பார்க்கும்
இவர்கள் முட்டாள்கள்
......க.ஆண்டியப்பன் ......